Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:58 — குகை

ஆயினும், உமது இரட்சகர் மன்னிப்பவர், கருணை நிரம்பியவர். அவர்களுடைய செயல்களுக்கு விளக்கம் கூறுமாறு அவர்களை அவர் அழைத்திருந்தால், அவர்களை அங்கேயே அப்பொழுதே அவர் அழித்திருப்பார். மாறாக, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரம் வரை அவர் அவகாசம் அளிக்கின்றார்; அதன் பின்னர் அவர்கள் ஒருபோதும் தப்பித்து விட முடியாது.

[18:57] தங்கள் இரட்சகரின் சான்றுகளால் நினைவூட்டப்பட்டு, பின்னர் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாது, அவற்றைப் புறக்கணிப்பவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அதன் விளைவாக, இதனை (இந்தக் குர்ஆனை) புரிந்து கொள்வதை விட்டும் அவர்களை தடுப்பதற்காக அவர் களுடைய இதயங்களின் மீது கவசங்களையும், மேலும் அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். இதனால், அவர்களை வழிநடத்துவதற்காக நீர் என்ன செய்கின்றீர் என்பது பொருட்டல்ல, அவர்கள் ஒருபோதும் எக்காலத்திலும் வழி நடத்தப்படமாட்டார்கள்.

[18:59] பல சமூகத்தாரை அவர்களுடைய வரம்புமீறல் களுக்காக நாம் அழித்தோம், அவர்களுடைய அழிவிற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் நிர்ணயித்தோம்.