குர்ஆன் 18:59 — குகை
பல சமூகத்தாரை அவர்களுடைய வரம்புமீறல் களுக்காக நாம் அழித்தோம், அவர்களுடைய அழிவிற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் நிர்ணயித்தோம்.
[18:58] ஆயினும், உமது இரட்சகர் மன்னிப்பவர், கருணை நிரம்பியவர். அவர்களுடைய செயல்களுக்கு விளக்கம் கூறுமாறு அவர்களை அவர் அழைத்திருந்தால், அவர்களை அங்கேயே அப்பொழுதே அவர் அழித்திருப்பார். மாறாக, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரம் வரை அவர் அவகாசம் அளிக்கின்றார்; அதன் பின்னர் அவர்கள் ஒருபோதும் தப்பித்து விட முடியாது.
[18:60] மோஸஸ் தன் சேவகரிடம், “இரு நதிகளும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரை நான் ஓயமாட்டேன், அதற்கு எவ்வளவு நேரமானாலும் சரியே” என்று கூறினார்.