குர்ஆன் 18:6 — குகை
இந்த செய்திகளுக்கான அவர்களுடைய மறுமொழிக்காகவும் மேலும் இதில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பதற்காகவும், உம்மையே நீர் பழித்துக் கொள்ளக் கூடும்; நீர் துக்கமடையவும் கூடும்.
[18:5] இதைப் பற்றிய எந்த அறிவையும் அவர்களோ, அன்றி அவர்களுடைய பெற்றோர்களோ பெற்றிருக்கவில்லை.அவர்களுடைய வாய்களிலிருந்து எப்படிப்பட்டதோர் இறை நிந்தனை வெளிவருகின்றது! அவர்கள் கூறுவது மிகப்பெரியதொரு பொய்யாகும்.
[18:7] அவர்களைச் சோதிப்பதற்காகவும், மேலும் இவ்விதமாக அவர்களில் நன்னெறியான காரியங்கள் செய்பவர்களைச் சிறப்பிப்பதற் காகவும், பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் நாம் அலங்காரமாக ஆக்கியுள்ளோம்.