குர்ஆன் 18:80 — குகை
“அந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவனு டைய பெற்றோர்கள் நல்ல நம்பிக்கை யாளர்களாக இருந்தனர், மேலும் அவன் தனது வரம்பு மீறுதல் மற்றும் நம்பிக்கையின்மையால்*, அவர்களுக்குச் சுமையாக ஆவான் என்பதை நாம் கண்டோம்.
[18:79] “அந்தக் கப்பலைப் பொறுத்தவரை, அது ஏழை மீனவர்களுக்குரியதாக இருந்தது, எனினும், அதனைப் பழுதாக்க நான் விரும்பினேன். அவர்களுக்குப் பின்னால் பலவந்தமாக ஒவ்வொரு கப்பலையும் பறிமுதல் செய்கின்ற ஓர் அரசன் வந்து கொண்டிருந்தான்.
[18:81] “உமது இரட்சகர் அவனுடைய இடத்தில் மற்றொரு மகனை, நன்னெறியிலும் மேலும் கனிவிலும் அவனை விட மேலான ஒருவனை அவனுக்குப் பகரமாக்க வேண்டும் என நாம் விரும்பினோம்.