குர்ஆன் 2:142 — பசுங்கன்று
மக்களுக்கிடையிலுள்ள மூடர்கள் “அவர் களுடைய கிப்லாவின் திசையை * அவர்கள் ஏன் மாற்றினார்கள்?” என்று கூறக்கூடும், “கிழக்கும், மேற்கும் கடவுள்-க்கே உரியது; நேர்வழியை விரும்புகின்ற எவரையும் அவர் வழி நடத்துகின்றார்” என்று கூறுவீராக.
[2:141] அது கடந்த காலத்தில் இருந்த ஒரு சமூகம் ஆகும். அவர்கள் சம்பாதித்தவற்றிற்கு அவர்கள் பொறுப்பாளிகள், மேலும் நீங்கள் சம்பாதித்தவற்றிற்கு நீங்கள் பொறுப்பாளிகள். அவர்கள் செய்த எந்த ஒன்றிற்கும், நீங்கள் பொறுப்பாளிகள் அல்ல.
[2:143] இவ்விதமாக மக்களுக்கிடையில் சாட்சியாளர் களாக நீங்கள் பணியாற்றும் பொருட்டும், மேலும் உங்களுக்கிடையில் சாட்சியாளராக தூதர் பணியாற்றும் பொருட்டும், நாம் உங்களை ஒரு நடு நிலையான சமூகமாக ஆக்கினோம். தூதரை விட்டும் தங்கள் குதிகால்களின் மீது திரும்பிவிடுவோரி லிருந்து, தூதரை உடனடியாகப் பின்பற்றக் கூடியவர்களைப் பிரித்தறிவிப்பதற்காகவே நாம் உம்முடைய முதல் கிப்லாவின் திசையை மாற்றினோம். அது ஒரு கடினமான சோதனை தான் எனினும் கடவுள்-ஆல் வழி நடத்தப் பட்டோருக்கல்ல. கடவுள் உங்களுடைய வழிபாட்டை ஒரு போதும் வீணாக்கி விடுவதில்லை. கடவுள் மனிதர்கள் பால் மிக்க இரக்கமிக்கவராக, மிக்க கருணையாளராக உள்ளார்.