குர்ஆன் 2:194 — பசுங்கன்று
புனித மாதங்களின் போது வலுச்சண்டையை ஒரு சமமான பதிலடியால் எதிர்கொள்ளலாம். அவர்கள் உங்களைத் தாக்கினால், ஒரு சமமான தண்டனையால் துன்புறுத்துவது கொண்டு பழிவாங்கலாம். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ள வேண்டும் மேலும் கடவுள் நன்னெறியாளர்களுடன் இருக்கின் றார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
[2:193] அடக்குமுறையினை களைவதற்கும், கடவுள்-ஐ சுதந்திரமாக வழிபடுவதற்கும் நீங்கள் அவர்களிடம் சண்டையிடலாம். அவர்கள் விலகிக்கொண்டால் நீங்கள் வலுச்சண்டை செய்ய வேண்டாம், வலுச்சண்டை செய்வோருக்கு எதிராக மட்டுமே வலுச்சண்டை அனுமதிக்கப் பட்டுள்ளது.
[2:195] நீங்கள் கடவுள்-ன் பாதையில் செலவிட வேண்டும்; உங்கள் சொந்தகரங்களாலேயே உங்களை அழிவில் எறிந்துவிடாதீர்கள். நீங்கள் தர்மம் செய்பவர்களாக இருக்க வேண்டும்; கடவுள் தர்மம் செய்பவர்களை நேசிக்கின்றார்.