குர்ஆன் 2:252 — பசுங்கன்று
இவை கடவுள்-ன் வெளிப்பாடுகள் ஆகும். இவற்றை உண்மையுடன் உம்* மூலமாக உரைக்கின்றோம். ஏனெனில் நீர் தூதர்களில் ஒருவராவீர்.
[2:251] அவர்கள் கடவுள்-ன் அனுமதியுடன் அவர்களை தோற்கடித்தனர், மேலும் டேவிட் கோலியாத் தைக் கொன்றார். கடவுள் அவருக்கு அரசுரி மையையும், ஞானத்தையும் கொடுத்தார், மேலும் தான் நாடியவற்றை அவருக்கு கற்றுக் கொடுத்தார். இவ்விதமாக சிலருக்கு எதிராக சிலமக்களுக்கு கடவுள் ஆதரவளித்திருக்கா விட்டால் பூமியில் குழப்பமே நிலவி இருக்கும். ஆனால் கடவுள் மனிதர்கள் மேல் தன் அருளைப் பொழிகின்றார்.
[2:253] இத்தூதர்கள்; இவர்களில் சிலருக்கு மற்றவர் களைவிட நாம் அதிகமாக அருள்புரிந்தோம். உதாரணமாக கடவுள் ஒருவரிடம் பேசினார், மேலும் அவர்களில் சிலரை உயர்ந்த பதவி களுக்கு நாம் உயர்த்தினோம் மேலும் மேரியின் மகன் இயேசுவிற்கு ஆழ்ந்த அற்புதங்களையும் மேலும் பரிசுத்த ஆவியை கொண்டு ஆதரவும் அளித்தோம். கடவுள் நாடி இருந்தால் அவர்களைப் பின்பற்றியவர்கள், தெளிவான சான்றுகள் தங்களிடம் வந்த பின்னர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டார்கள், அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர். மேலும் சிலர் நம்ப மறுத்தனர். கடவுள் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். அனைத்தும் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே இருக்கின்றது.