குர்ஆன் 2:251 — பசுங்கன்று
அவர்கள் கடவுள்-ன் அனுமதியுடன் அவர்களை தோற்கடித்தனர், மேலும் டேவிட் கோலியாத் தைக் கொன்றார். கடவுள் அவருக்கு அரசுரி மையையும், ஞானத்தையும் கொடுத்தார், மேலும் தான் நாடியவற்றை அவருக்கு கற்றுக் கொடுத்தார். இவ்விதமாக சிலருக்கு எதிராக சிலமக்களுக்கு கடவுள் ஆதரவளித்திருக்கா விட்டால் பூமியில் குழப்பமே நிலவி இருக்கும். ஆனால் கடவுள் மனிதர்கள் மேல் தன் அருளைப் பொழிகின்றார்.
[2:250] கோலியாத்தையும் அவனது படையினரையும் அவர்கள் எதிர் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப் பாட்டை வழங்குவீராக, எங்கள் பாதங்களைப் பலப்படுத்துவீராக, மேலும் நம்பமறுக்கின்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு ஆதரவளிப் பீராக” என்றும் பிரார்த்தித்தார்கள்.
[2:252] இவை கடவுள்-ன் வெளிப்பாடுகள் ஆகும். இவற்றை உண்மையுடன் உம்* மூலமாக உரைக்கின்றோம். ஏனெனில் நீர் தூதர்களில் ஒருவராவீர்.