Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:250 — பசுங்கன்று

கோலியாத்தையும் அவனது படையினரையும் அவர்கள் எதிர் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப் பாட்டை வழங்குவீராக, எங்கள் பாதங்களைப் பலப்படுத்துவீராக, மேலும் நம்பமறுக்கின்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு ஆதரவளிப் பீராக” என்றும் பிரார்த்தித்தார்கள்.

[2:249] படைக்கு சவுல் தலைமை ஏற்ற போது அவர், “கடவுள் உங்களை ஒரு நீரோடையைக் கொண்டு சோதிப்பார். எவர் ஒருவர் அதிலிருந்து அருந்துகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல - அதை சுவைக் காதவர்கள் மட்டும் என்னைச் சார்ந்தவர் - ஒருமிடறு தவிர”, என்று கூறினார். அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள். நம்பிக்கை கொண்டவர்க ளோடு அதை அவர் கடந்தபோது அவர்கள், “இப்போது கோலியாத்தையும் அவனது படைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமை எங்களுக்குக் குறைவாக உள்ளது” என்று கூறினார்கள். கடவுள்-ஐ சந்திப்போம் என்ற உணர்வோடிருந்தவர்கள், “கடவுள்-ன் அனு மதியுடன் பல சிறிய படையினர், பெரிய படையை தோற்கடித்திருக்கின்றனர். உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களோடு கடவுள் இருக்கின்றார்,” என்று கூறினார்கள்.

[2:251] அவர்கள் கடவுள்-ன் அனுமதியுடன் அவர்களை தோற்கடித்தனர், மேலும் டேவிட் கோலியாத் தைக் கொன்றார். கடவுள் அவருக்கு அரசுரி மையையும், ஞானத்தையும் கொடுத்தார், மேலும் தான் நாடியவற்றை அவருக்கு கற்றுக் கொடுத்தார். இவ்விதமாக சிலருக்கு எதிராக சிலமக்களுக்கு கடவுள் ஆதரவளித்திருக்கா விட்டால் பூமியில் குழப்பமே நிலவி இருக்கும். ஆனால் கடவுள் மனிதர்கள் மேல் தன் அருளைப் பொழிகின்றார்.