குர்ஆன் 2:268 — பசுங்கன்று
சாத்தான் வறுமையை உங்களுக்கு வாக்களித்து மேலும் தீமைகள் செய்யும் படி உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அதே சமயம் கடவுள் அவரிடமிருந்து மன்னிப்பையும் மேலும் அருளையும் உங்களுக்கு வாக்களிக்கின்றார். கடவுள் தாராளமானவர், எல்லாம் அறிந்தவர்.
[2:267] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சம்பாதிக்கும் நல்ல பொருட்களில் இருந்தும், மேலும் பூமியி லிருந்து உங்களுக்காக நாம் உருவாக்கிய வற்றில் இருந்தும் நீங்கள் தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுப்பதற்காக கெட்டவை களை, அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்காதீர்கள், அத்தகைய பொருட்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் மூடி இருந்தாலேயன்றி அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். கடவுள் செல்வந்தர், புகழுக்குரியவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[2:269] அவர், தான் தேர்ந்தெடுக்கின்றவர்கள் மீது ஞானத்தை அளிக்கின்றார், மேலும் எவர் ஞானத்தை அடைகின்றாரோ அவர் மகத்தான பரிசை அடைந்து விட்டார். அறிவுத்திறன் உடையவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.