குர்ஆன் 2:269 — பசுங்கன்று
அவர், தான் தேர்ந்தெடுக்கின்றவர்கள் மீது ஞானத்தை அளிக்கின்றார், மேலும் எவர் ஞானத்தை அடைகின்றாரோ அவர் மகத்தான பரிசை அடைந்து விட்டார். அறிவுத்திறன் உடையவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
[2:268] சாத்தான் வறுமையை உங்களுக்கு வாக்களித்து மேலும் தீமைகள் செய்யும் படி உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அதே சமயம் கடவுள் அவரிடமிருந்து மன்னிப்பையும் மேலும் அருளையும் உங்களுக்கு வாக்களிக்கின்றார். கடவுள் தாராளமானவர், எல்லாம் அறிந்தவர்.
[2:270] எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் அல்லது தர்மம் சம்பந்தமான வாக்குறுதியை நீங்கள் நிறைவு செய்தாலும், அவற்றைக் கடவுள் முற்றிலும் அறிகின்றார். தீயவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.