Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:270 — பசுங்கன்று

எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் அல்லது தர்மம் சம்பந்தமான வாக்குறுதியை நீங்கள் நிறைவு செய்தாலும், அவற்றைக் கடவுள் முற்றிலும் அறிகின்றார். தீயவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.

[2:269] அவர், தான் தேர்ந்தெடுக்கின்றவர்கள் மீது ஞானத்தை அளிக்கின்றார், மேலும் எவர் ஞானத்தை அடைகின்றாரோ அவர் மகத்தான பரிசை அடைந்து விட்டார். அறிவுத்திறன் உடையவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

[2:271] உங்களுடைய தர்மத்தை, நீங்கள் வெளிப் படையாக செய்தாலும் நல்லது தான். ஆனால் அவற்றை மறைவாக வைத்து மேலும் அவற்றை ஏழைகளுக்கு கொடுத்தால் அது உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுடைய அதிகமான பாவங்களுக்குப் பரிகாரமாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.