Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:271 — பசுங்கன்று

உங்களுடைய தர்மத்தை, நீங்கள் வெளிப் படையாக செய்தாலும் நல்லது தான். ஆனால் அவற்றை மறைவாக வைத்து மேலும் அவற்றை ஏழைகளுக்கு கொடுத்தால் அது உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுடைய அதிகமான பாவங்களுக்குப் பரிகாரமாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[2:270] எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் அல்லது தர்மம் சம்பந்தமான வாக்குறுதியை நீங்கள் நிறைவு செய்தாலும், அவற்றைக் கடவுள் முற்றிலும் அறிகின்றார். தீயவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.

[2:272] எவர் ஒருவரையும் நேர்வழியில் நடத்துவதற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. கடவுள் ஒருவர் மட்டுமே (நேர்வழியில் நடத்தப்படவேண்டும் என்று) தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களை வழி நடத்துகின்றார். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் உங்கள் சொந்த நன்மைக்கே ஆகும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் கடவுள்-ன் பொருட்டே இருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் சிறிதளவும் அநீதமின்றி உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.