குர்ஆன் 2:272 — பசுங்கன்று
எவர் ஒருவரையும் நேர்வழியில் நடத்துவதற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. கடவுள் ஒருவர் மட்டுமே (நேர்வழியில் நடத்தப்படவேண்டும் என்று) தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களை வழி நடத்துகின்றார். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் உங்கள் சொந்த நன்மைக்கே ஆகும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் கடவுள்-ன் பொருட்டே இருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் சிறிதளவும் அநீதமின்றி உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
[2:271] உங்களுடைய தர்மத்தை, நீங்கள் வெளிப் படையாக செய்தாலும் நல்லது தான். ஆனால் அவற்றை மறைவாக வைத்து மேலும் அவற்றை ஏழைகளுக்கு கொடுத்தால் அது உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுடைய அதிகமான பாவங்களுக்குப் பரிகாரமாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[2:273] கடவுள்-ன் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டு, மேலும் குடிபெயரஇயலாத ஏழைகளுக்கு தர்மம் போய்ச் சேர வேண்டும். அவர்களுடைய கண்ணியத்தைக் கண்டு விபரம் அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணக் கூடும். ஆனால் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ள இயலும். அவர்கள் ஒரு போதும் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்கமாட்டார்கள். எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.