Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:273 — பசுங்கன்று

கடவுள்-ன் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டு, மேலும் குடிபெயரஇயலாத ஏழைகளுக்கு தர்மம் போய்ச் சேர வேண்டும். அவர்களுடைய கண்ணியத்தைக் கண்டு விபரம் அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணக் கூடும். ஆனால் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ள இயலும். அவர்கள் ஒரு போதும் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்கமாட்டார்கள். எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[2:272] எவர் ஒருவரையும் நேர்வழியில் நடத்துவதற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. கடவுள் ஒருவர் மட்டுமே (நேர்வழியில் நடத்தப்படவேண்டும் என்று) தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களை வழி நடத்துகின்றார். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் உங்கள் சொந்த நன்மைக்கே ஆகும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் கடவுள்-ன் பொருட்டே இருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் சிறிதளவும் அநீதமின்றி உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

[2:274] எவர்கள் தர்மத்தை இரவிலும், பகலிலும், மேலும் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கொடுக்கின் றார்களோ, அவர்கள் அதற்கான வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.