Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:274 — பசுங்கன்று

எவர்கள் தர்மத்தை இரவிலும், பகலிலும், மேலும் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கொடுக்கின் றார்களோ, அவர்கள் அதற்கான வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[2:273] கடவுள்-ன் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டு, மேலும் குடிபெயரஇயலாத ஏழைகளுக்கு தர்மம் போய்ச் சேர வேண்டும். அவர்களுடைய கண்ணியத்தைக் கண்டு விபரம் அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணக் கூடும். ஆனால் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ள இயலும். அவர்கள் ஒரு போதும் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்கமாட்டார்கள். எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[2:275] எவர்கள் கடும் வட்டியை வசூலிக்கின்றார்களோ, அவர்கள் சாத்தானுடைய ஆதிக்கத்தால் கட்டுப் படுத்தப்பட்டவர்களைப் போன்ற அதே நிலையில் இருக்கின்றார்கள். கடும் வட்டி வாங்குவதும், வியாபாரம் செய்வதும் ஒன்றே என்று அவர்கள் கூறியதே இதற்கு காரணம். ஆயினும் கடவுள் வியாபாரத்தை அனுமதிக்கின்றார், மேலும் கடும் வட்டியை தடை செய்கின்றார். இவ்விதமாக, எவர் தன் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த கட்டளையில் கவனம் செலுத்தி மேலும் கடும் வட்டி வாங்குவதை விட்டும் தவிர்த்துக் கொள் கின்றாரோ, அவர் அவருடைய கடந்த கால சம்பாத்தியத்தை வைத்துக் கொள்ளலாம். மேலும் அவருடைய தீர்ப்பு கடவுள்-இடம் இருக்கின்றது. தொடர்ந்து கடும் வட்டி வாங்குதலில் நீடிப் பவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் நரகத்திற் குள்ளாவார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.