Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:275 — பசுங்கன்று

الَّذينَ يَأكُلونَ الرِّبوٰا۟ لا يَقومونَ إِلّا كَما يَقومُ الَّذى يَتَخَبَّطُهُ الشَّيطٰنُ مِنَ المَسِّ ۚ ذٰلِكَ بِأَنَّهُم قالوا إِنَّمَا البَيعُ مِثلُ الرِّبوٰا۟ ۗ وَأَحَلَّ اللَّهُ البَيعَ وَحَرَّمَ الرِّبوٰا۟ ۚ فَمَن جاءَهُ مَوعِظَةٌ مِن رَبِّهِ فَانتَهىٰ فَلَهُ ما سَلَفَ وَأَمرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَن عادَ فَأُولٰئِكَ أَصحٰبُ النّارِ ۖ هُم فيها خٰلِدونَ

எவர்கள் கடும் வட்டியை வசூலிக்கின்றார்களோ, அவர்கள் சாத்தானுடைய ஆதிக்கத்தால் கட்டுப் படுத்தப்பட்டவர்களைப் போன்ற அதே நிலையில் இருக்கின்றார்கள். கடும் வட்டி வாங்குவதும், வியாபாரம் செய்வதும் ஒன்றே என்று அவர்கள் கூறியதே இதற்கு காரணம். ஆயினும் கடவுள் வியாபாரத்தை அனுமதிக்கின்றார், மேலும் கடும் வட்டியை தடை செய்கின்றார். இவ்விதமாக, எவர் தன் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த கட்டளையில் கவனம் செலுத்தி மேலும் கடும் வட்டி வாங்குவதை விட்டும் தவிர்த்துக் கொள் கின்றாரோ, அவர் அவருடைய கடந்த கால சம்பாத்தியத்தை வைத்துக் கொள்ளலாம். மேலும் அவருடைய தீர்ப்பு கடவுள்-இடம் இருக்கின்றது. தொடர்ந்து கடும் வட்டி வாங்குதலில் நீடிப் பவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் நரகத்திற் குள்ளாவார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

[2:274] எவர்கள் தர்மத்தை இரவிலும், பகலிலும், மேலும் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கொடுக்கின் றார்களோ, அவர்கள் அதற்கான வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[2:276] கடவுள் கடும் வட்டியைக் கண்டனம் செய்து மேலும் தான தர்மங்களுக்கு அருள் புரிகின்றார். நம்ப மறுக்கும் குற்றவாளிகள் அனைவரையும் கடவுள் வெறுக்கின்றார்.