குர்ஆன் 2:277 — பசுங்கன்று
எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தி மேலும் தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) கவனமாக கடைப் பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுக்கின்றார்களோ, அவர்கள், அவர் களுடைய வெகுமதியை அவர்களுடைய இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[2:276] கடவுள் கடும் வட்டியைக் கண்டனம் செய்து மேலும் தான தர்மங்களுக்கு அருள் புரிகின்றார். நம்ப மறுக்கும் குற்றவாளிகள் அனைவரையும் கடவுள் வெறுக்கின்றார்.
[2:278] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் நம்பிக்கை யாளர்களாயின், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொண்டு மேலும், எல்லா விதமான கடும் வட்டியையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.