குர்ஆன் 2:278 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் நம்பிக்கை யாளர்களாயின், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொண்டு மேலும், எல்லா விதமான கடும் வட்டியையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
[2:277] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தி மேலும் தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) கவனமாக கடைப் பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுக்கின்றார்களோ, அவர்கள், அவர் களுடைய வெகுமதியை அவர்களுடைய இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[2:279] அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் பின்னர் கடவுள்-இடமிருந்தும் மேலும் அவருடைய தூதரிடமிருந்தும் ஒரு போரை எதிர்பார்த் திருங்கள். ஆனால், நீங்கள் வருந்தித்திருந்தி விட்டால் அநியாயம் செய்யாமலோ அல்லது அநியாயத்திற்கு ஆளாகாமலோ உங்கள் முதலீடுகளை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.