குர்ஆன் 2:279 — பசுங்கன்று
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் பின்னர் கடவுள்-இடமிருந்தும் மேலும் அவருடைய தூதரிடமிருந்தும் ஒரு போரை எதிர்பார்த் திருங்கள். ஆனால், நீங்கள் வருந்தித்திருந்தி விட்டால் அநியாயம் செய்யாமலோ அல்லது அநியாயத்திற்கு ஆளாகாமலோ உங்கள் முதலீடுகளை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
[2:278] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் நம்பிக்கை யாளர்களாயின், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொண்டு மேலும், எல்லா விதமான கடும் வட்டியையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
[2:280] கடன்பட்டவர் கொடுக்க இயலாதவராக இருந்தால், ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்திருங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களே யானால் அந்த கடனை தர்மமாக விட்டு விடுவது உங்களுக்கு சிறந்ததாகும்.