குர்ஆன் 2:280 — பசுங்கன்று
கடன்பட்டவர் கொடுக்க இயலாதவராக இருந்தால், ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்திருங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களே யானால் அந்த கடனை தர்மமாக விட்டு விடுவது உங்களுக்கு சிறந்ததாகும்.
[2:279] அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் பின்னர் கடவுள்-இடமிருந்தும் மேலும் அவருடைய தூதரிடமிருந்தும் ஒரு போரை எதிர்பார்த் திருங்கள். ஆனால், நீங்கள் வருந்தித்திருந்தி விட்டால் அநியாயம் செய்யாமலோ அல்லது அநியாயத்திற்கு ஆளாகாமலோ உங்கள் முதலீடுகளை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
[2:281] நீங்கள் கடவுள்-இடம் திருப்பப்பட்டு, மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த அனைத்து செயல்களுக்கும் , சிறிதளவும் அநீதமின்றி கூலி கொடுக்கப்படும் அந்த நாள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.