குர்ஆன் 2:281 — பசுங்கன்று
நீங்கள் கடவுள்-இடம் திருப்பப்பட்டு, மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த அனைத்து செயல்களுக்கும் , சிறிதளவும் அநீதமின்றி கூலி கொடுக்கப்படும் அந்த நாள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
[2:280] கடன்பட்டவர் கொடுக்க இயலாதவராக இருந்தால், ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்திருங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களே யானால் அந்த கடனை தர்மமாக விட்டு விடுவது உங்களுக்கு சிறந்ததாகும்.
[2:282] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் ஒரு கடனை எந்த தவணைக்கு கொடுக்கும் போதும் அதை நீங்கள் எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு பார பட்சமற்ற எழுத்தர் அதை எழுத வேண்டும். கடவுள்-ன் உபதேசங்களுக்கு இணங்க இச் சேவையை செய்வதற்கு எந்த ஒரு எழுத்தரும் மறுக்கக் கூடாது. அவர் எழுத வேண்டும், அதே சமயம் கடன் பெற்றவர் கால தவணையை கூற வேண்டும். அவர் தன் இரட்சகரான கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு போதும் ஏமாற்றக்கூடாது . கடன் பெற்றவர் மனநிலை சரியில்லாதவராகவோ, அல்லது உதவியற்றவராகவோ அல்லது எடுத்துச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் நியாயமான முறையில் அவருடைய பாதுகாவலர் சொல்ல வேண்டும்.* இரு ஆண்கள் சாட்சிகளாக பணி செய்ய வேண்டும். இரு ஆண்கள் இல்லாவிட்டால் ஒரு ஆண் மற்றும் அனைவரும்* ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சிகளான இரு பெண்கள். இவ்விதமாக, ஒரு பெண் ஒரு தலைப்பட்ச மானாலும் மற்றவள் அவளுக்கு நினைவு படுத்துவாள். சாட்சியாளர்கள் சாட்சியம் கூற அழைக்கப்பட்டால் அதை செய்வது சாட்சிகள் மீது கடமையாகும். எவ்வளவு நீளமானதாக இருந்தாலும், திருப்பிக் கொடுக்கப்படவேண்டிய நேரம் உட்பட அனைத்து விபரங்களையும் எழுதுவதற்குக் களைத்துவிட வேண்டாம். இது கடவுள்-ன் பார்வையில் நியாயமானதாகவும், சிறந்த சாட்சியத்திற்கு உறுதியளிப்பதாகவும், மேலும் உங்கள் உள்ளங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீக்கக் கூடியதாகவும்உள்ளது. நின்ற நிலையில் அவ்வப்போது நீங்கள் நிறைவேற்றும் வியாபார விவரங்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் அவை களுக்கு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். எந்த எழுத்தரோ அல்லது சாட்சியோ அவருடைய பணியின் காரணமாக துன்புறுத்தப்படக்கூடாது. நீங்கள் அவர்களை துன்புறுத்தினால் அது உங்கள் புறமுள்ள பாவமாகும். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் கடவுள் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார், கடவுள் எல்லாம் அறிந்தவர்.