Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:282 — பசுங்கன்று

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا تَدايَنتُم بِدَينٍ إِلىٰ أَجَلٍ مُسَمًّى فَاكتُبوهُ ۚ وَليَكتُب بَينَكُم كاتِبٌ بِالعَدلِ ۚ وَلا يَأبَ كاتِبٌ أَن يَكتُبَ كَما عَلَّمَهُ اللَّهُ ۚ فَليَكتُب وَليُملِلِ الَّذى عَلَيهِ الحَقُّ وَليَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلا يَبخَس مِنهُ شَيئًا ۚ فَإِن كانَ الَّذى عَلَيهِ الحَقُّ سَفيهًا أَو ضَعيفًا أَو لا يَستَطيعُ أَن يُمِلَّ هُوَ فَليُملِل وَلِيُّهُ بِالعَدلِ ۚ وَاستَشهِدوا شَهيدَينِ مِن رِجالِكُم ۖ فَإِن لَم يَكونا رَجُلَينِ فَرَجُلٌ وَامرَأَتانِ مِمَّن تَرضَونَ مِنَ الشُّهَداءِ أَن تَضِلَّ إِحدىٰهُما فَتُذَكِّرَ إِحدىٰهُمَا الأُخرىٰ ۚ وَلا يَأبَ الشُّهَداءُ إِذا ما دُعوا ۚ وَلا تَسـَٔموا أَن تَكتُبوهُ صَغيرًا أَو كَبيرًا إِلىٰ أَجَلِهِ ۚ ذٰلِكُم أَقسَطُ عِندَ اللَّهِ وَأَقوَمُ لِلشَّهٰدَةِ وَأَدنىٰ أَلّا تَرتابوا ۖ إِلّا أَن تَكونَ تِجٰرَةً حاضِرَةً تُديرونَها بَينَكُم فَلَيسَ عَلَيكُم جُناحٌ أَلّا تَكتُبوها ۗ وَأَشهِدوا إِذا تَبايَعتُم ۚ وَلا يُضارَّ كاتِبٌ وَلا شَهيدٌ ۚ وَإِن تَفعَلوا فَإِنَّهُ فُسوقٌ بِكُم ۗ وَاتَّقُوا اللَّهَ ۖ وَيُعَلِّمُكُمُ اللَّهُ ۗ وَاللَّهُ بِكُلِّ شَيءٍ عَليمٌ

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் ஒரு கடனை எந்த தவணைக்கு கொடுக்கும் போதும் அதை நீங்கள் எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு பார பட்சமற்ற எழுத்தர் அதை எழுத வேண்டும். கடவுள்-ன் உபதேசங்களுக்கு இணங்க இச் சேவையை செய்வதற்கு எந்த ஒரு எழுத்தரும் மறுக்கக் கூடாது. அவர் எழுத வேண்டும், அதே சமயம் கடன் பெற்றவர் கால தவணையை கூற வேண்டும். அவர் தன் இரட்சகரான கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு போதும் ஏமாற்றக்கூடாது . கடன் பெற்றவர் மனநிலை சரியில்லாதவராகவோ, அல்லது உதவியற்றவராகவோ அல்லது எடுத்துச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் நியாயமான முறையில் அவருடைய பாதுகாவலர் சொல்ல வேண்டும்.* இரு ஆண்கள் சாட்சிகளாக பணி செய்ய வேண்டும். இரு ஆண்கள் இல்லாவிட்டால் ஒரு ஆண் மற்றும் அனைவரும்* ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சிகளான இரு பெண்கள். இவ்விதமாக, ஒரு பெண் ஒரு தலைப்பட்ச மானாலும் மற்றவள் அவளுக்கு நினைவு படுத்துவாள். சாட்சியாளர்கள் சாட்சியம் கூற அழைக்கப்பட்டால் அதை செய்வது சாட்சிகள் மீது கடமையாகும். எவ்வளவு நீளமானதாக இருந்தாலும், திருப்பிக் கொடுக்கப்படவேண்டிய நேரம் உட்பட அனைத்து விபரங்களையும் எழுதுவதற்குக் களைத்துவிட வேண்டாம். இது கடவுள்-ன் பார்வையில் நியாயமானதாகவும், சிறந்த சாட்சியத்திற்கு உறுதியளிப்பதாகவும், மேலும் உங்கள் உள்ளங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீக்கக் கூடியதாகவும்உள்ளது. நின்ற நிலையில் அவ்வப்போது நீங்கள் நிறைவேற்றும் வியாபார விவரங்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் அவை களுக்கு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். எந்த எழுத்தரோ அல்லது சாட்சியோ அவருடைய பணியின் காரணமாக துன்புறுத்தப்படக்கூடாது. நீங்கள் அவர்களை துன்புறுத்தினால் அது உங்கள் புறமுள்ள பாவமாகும். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் கடவுள் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார், கடவுள் எல்லாம் அறிந்தவர்.

[2:281] நீங்கள் கடவுள்-இடம் திருப்பப்பட்டு, மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த அனைத்து செயல்களுக்கும் , சிறிதளவும் அநீதமின்றி கூலி கொடுக்கப்படும் அந்த நாள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

[2:283] நீங்கள் பிரயாணத்தில் இருந்து மேலும் எழுதுபவர் கிடைக்கவில்லை என்றால் திருப்பித் தருவதற்கு உத்தரவாதமாக ஒரு உறுதிப்பத்திரம் அனுப்பப் பட வேண்டும். இவ்விதமாக ஒருவர் நம்பப்பட்டால் கெடு முடியும் போது அவர் அந்த உறுதிப் பத்திரத்தை திருப்பி தந்துவிட வேண்டும். மேலும் அவர் அவருடைய இரட்சகராகிய கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சாட்சியளித்ததை மறைத்து எந்த ஒரு அத்தாட்சி யையும் நிறுத்தி வைத்துக் கொள்ளாதீர்கள். எவர் ஒருவர் ஒரு அத்தாட்சியை நிறுத்தி வைத்துக் கொள்கின்றாரோ அவர் மனதளவில் பாவியாக உள்ளார். நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.