Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:124 — தா.ஹா.

“என் தூதுச் செய்தியை அலட்சியப் படுத்துகின்றவனைப் பொறுத்தவரை, அவனுக்குத் துன்பகரமானதொரு வாழ்வே இருக்கும், மேலும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளன்று, அவனை நாம் குருடனாக உயிர்ப்பித்தெழுப்புவோம்.”

[20:123] அவர், “நீங்கள் அனைவரும், அதிலிருந்து கீழே செல்லுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதிகள் ஆவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டல் வரும்போது, எவரொருவர் என் வழிகாட்டலைப் பின்பற்றுகின்றாரோ அவர் வழிதவற மாட்டார், அன்றி எந்த இன்னலையும் அனுபவிக்க மாட்டார்” என்று கூறினார்.

[20:125] அவன் , “என் இரட்சகரே, நான் பார்வையுடைய ஒருவனாக இருந்து வந்த போதும், ஏன் என்னைக் குருடனாக வரவழைத்தீர்?” என்று கூறுவான்.