Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:127 — தா.ஹா.

வரம்பு மீறுபவர்களுக்கும் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களுக்கும் இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம். மறுவுலகின் அந்தத் தண்டனையானது மிக மோசமானது, மேலும் நிரந்தரமானது.

[20:126] அவர், “நமது வெளிப்பாடுகள் உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டதால், இப்போது நீ மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவார்.

[20:128] முந்திய எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்பது எப் பொழுதாவது அவர்களுக்குத் தோன்று கின்றதா? தங்களுக்கு முன்னிருந்தவர் களின் வீடுகளில் இப்போது அவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். அறிவுத்திறனுடை யோருக்கு இவை அத்தாட்சிகளாகும்.