குர்ஆன் 20:78 — தா.ஹா.
ஃபேரோ தன் படையினருடன் அவர்களைப் பின் தொடர்ந்தான், ஆனால் அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டும் என விதிக்கப் பட்டவாறே, அந்தக் கடல் அவர்களை மூழ்கடித்து விட்டது.
[20:77] மோஸஸிற்கு நாம்: “என் அடியார்களை வழிநடத்திக் கொண்டு வெளியில் செல்வீராக, மேலும் கடலின் குறுக்கில் அவர்களுக்காக உலர்ந்ததொரு பாதையை அடித்து உண்டாக்குவீராக. பிடிபட்டு விடுவோமோ என்று நீர் அஞ்ச வேண்டாம், அன்றியும் நீர் கவலை கொள்ளவும் வேண்டாம்” என்று உள்ளுணர்வளித்தோம்.
[20:79] இவ்விதமாக, ஃபேரோ தன் சமூகத்தாரை வழிதவறச் செய்தான்; அவர்களை அவன் நேர் வழி நடத்தவில்லை.