குர்ஆன் 21:42 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
“இரவிலோ அல்லது பகலிலோ மிக்க அருளாளரிடமிருந்து உங்களைக் காக்க எவரால் இயலும்?” என்று கூறுவீராக. உண்மையில், தங்கள் இரட்சகரின் தூதுச் செய்தியில் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.
[21:41] உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப் பட்டிருக்கின்றனர், மேலும், அதன் விளைவாக, அவர்களைப் பரிகசித்தவர்கள் அவர்களுடைய பரிகசிப்பிற்கான தண்டனைக்கு உள் ளானார்கள்.
[21:43] நம்மிடமிருந்து அவர்களைக் காக்கக்கூடிய தெய்வங்களை அவர்கள் வைத்திருக்கின்றனரா? அவர்கள் தங்களுக்கே கூட உதவி செய்து கொள்ள முடியாது. அன்றி நம்மைச் சந்திக்க அழைக்கப்படும் போது அவர்கள் ஒருவர் மற்றவருடன் சேர்ந்து வரவும் முடியாது.