குர்ஆன் 21:43 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நம்மிடமிருந்து அவர்களைக் காக்கக்கூடிய தெய்வங்களை அவர்கள் வைத்திருக்கின்றனரா? அவர்கள் தங்களுக்கே கூட உதவி செய்து கொள்ள முடியாது. அன்றி நம்மைச் சந்திக்க அழைக்கப்படும் போது அவர்கள் ஒருவர் மற்றவருடன் சேர்ந்து வரவும் முடியாது.
[21:42] “இரவிலோ அல்லது பகலிலோ மிக்க அருளாளரிடமிருந்து உங்களைக் காக்க எவரால் இயலும்?” என்று கூறுவீராக. உண்மையில், தங்கள் இரட்சகரின் தூதுச் செய்தியில் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.
[21:44] இந்த மக்களுக்கும் மேலும் இவர்களுடைய முன்னோர்களுக்கும், முதிர்ந்ததொரு வயது முடியும் வரை நாம் வழங்கி உள்ளோம். பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதை அவர்கள் காணவில்லையா? இந்த நடைமுறையை அவர்களால் தலைகீழாக மாற்றிவிட முடியுமா?