குர்ஆன் 21:44 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
இந்த மக்களுக்கும் மேலும் இவர்களுடைய முன்னோர்களுக்கும், முதிர்ந்ததொரு வயது முடியும் வரை நாம் வழங்கி உள்ளோம். பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதை அவர்கள் காணவில்லையா? இந்த நடைமுறையை அவர்களால் தலைகீழாக மாற்றிவிட முடியுமா?
[21:43] நம்மிடமிருந்து அவர்களைக் காக்கக்கூடிய தெய்வங்களை அவர்கள் வைத்திருக்கின்றனரா? அவர்கள் தங்களுக்கே கூட உதவி செய்து கொள்ள முடியாது. அன்றி நம்மைச் சந்திக்க அழைக்கப்படும் போது அவர்கள் ஒருவர் மற்றவருடன் சேர்ந்து வரவும் முடியாது.
[21:45] “நான் தெய்வீக உள்ளுணர்விற்கு இணங்க உங்களை எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக. ஆயினும், தாங்கள் எச்சரிக்கப்படும் பொழுது, செவிடர்களால் அழைப்பைச் செவியேற்க இயலாது.