குர்ஆன் 21:45 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
“நான் தெய்வீக உள்ளுணர்விற்கு இணங்க உங்களை எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக. ஆயினும், தாங்கள் எச்சரிக்கப்படும் பொழுது, செவிடர்களால் அழைப்பைச் செவியேற்க இயலாது.
[21:44] இந்த மக்களுக்கும் மேலும் இவர்களுடைய முன்னோர்களுக்கும், முதிர்ந்ததொரு வயது முடியும் வரை நாம் வழங்கி உள்ளோம். பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதை அவர்கள் காணவில்லையா? இந்த நடைமுறையை அவர்களால் தலைகீழாக மாற்றிவிட முடியுமா?
[21:46] உம் இரட்சகருடைய தண்டனையின் மாதிரிகளில் ஒன்று அவர்களைத் துன்புறுத்தும் போது, உடனடியாக அவர்கள், “ நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந்தோம்” என்று கூறு கின்றார்கள்.