குர்ஆன் 22:14 — புனித யாத்திரை
நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிக்கின்றார். ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது.
[22:13] அவனுக்குப் பயன்தருவதை விட அவனுக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவற்றை அவன் இணையாக வழிபடுகின்றான். என்ன ஒரு துன்பகரமான எஜமானன்! என்ன ஒரு துன்பகரமான தோழன்!
[22:15] எவர் ஒருவர் இந்த வாழ்விலும் மறுவுலகிலும் தனக்குக் கடவுள் ஆதரவளிக்க முடியாதென எண்ணுகின்றாரோ, அவர் வானத்தில் (உள்ள தன் படைப்பாளரை) நோக்கி முற்றிலும் திரும்பிக் கொள்ளட்டும், மேலும் (வேறு எவர் ஒருவரையும் அவர் சார்ந்திருப்பதை) துண்டித் துக் கொள்ளட்டும். இத்திட்டம் அவரை வருத் திக் கொண்டிருக்கின்ற எந்த ஒன்றையும், நீக்கிவிடுவதை அப்போது அவர் காண்பார்.