Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:4 — புனித யாத்திரை

எவர் ஒருவர் அவனுடன் தன்னைக் கூட்டாளியாக்கிக் கொள்கின்றாரோ, அவரை அவன் தவறாக வழி நடத்துவதுடன் நரகின் மீளாத்துயரின் பால் அவரை வழிநடத்தி விடுவான் என்றும் விதிக்கப் பட்டுள்ளது.

[22:3] மனிதர்களில், அறிவின்றிக் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிப்பவர்கள் இருக்கின்றனர், மேலும் கலகக்காரனான ஒவ்வொரு சாத்தா னையும் பின்பற்றுகின்றனர்.

[22:5] மனிதர்களே, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் பற்றி நீங்கள் ஏதேனும் ஐயம் கொண்டிருப்பின், (நினைவில் கொள்ளுங்கள்) நாம் உங்களைத் தூசியிலிருந்தும், அதன் பின்னர் தொங்கு கின்ற ஒரு (கருவாக) மாறும், மிகச்சிறியதொரு துளியிலிருந்தும் படைத்தோம், பின்னர் அது உயிரளிக்கப்பட்ட ஒரு சிசுவாக ஆகிவிடுகின்றது, அல்லது உயிரற்றதெனக் கருதப்படு கின்றது. இவ்விதமாக நாம் விஷயங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத்திற்கு* நாம் நாடியவற்றைக் கருவறைகளில் நாம் தங்கச் செய்கின்றோம். உங்களைக் குழந்தைகளாக நாம் வெளிக்கொண்டு வருகின்றோம், பின்னர் நீங்கள் முதிர்ச்சியை அடைகின்றீர்கள். உங்களில் சிலர் இளவயதில் இறந்து விடும் அதே சமயம், மற்றவர்கள், குறிப்பிட்ட ஓர் எல்லைக்கு அப்பால், எந்த அறிவையும் அதிகமாக அடைந்து கொள்ள முடியாது என்பதைக் கண்டுகொள்வதற் காகவே, மிக மோசமான வயது வரை உயிர் வாழ்கின்றீர்கள். இன்னும், நீங்கள் இறந்து விட்ட ஒரு நிலத்தைப் பார்க்கின்றீர்கள், பின்னர் அதில் நாம் தண்ணீரைப் பொழிந்தவுடன், அதில் உயிர் தளிர்க்கின்றது, மேலும் எல்லா வகை அழகிய தாவரங்களையும் முளைப்பிக்கின்றது.