குர்ஆன் 22:41 — புனித யாத்திரை
அவர்கள் யாரென்றால், பூமியின் ஆட்சி யாளர்களாக நாம் அவர்களை நியமித்தால், அவர்கள் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிலைநாட்டுவார்கள், மேலும் நன்னெறியை ஆதரிப்பார்கள் மேலும் தீமையைத் தடுப்பார்கள். கடவுள் தான் முடிவான அரசர் ஆவார்.
[22:40] “எங்கள் இரட்சகர் கடவுள் தான்” என்று கூறியதைத் தவிர, மற்ற காரணமெதற்காகவு மின்றி, அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு நியாயமின்றி வெளியேற்றப்பட்டனர். மற்றவர்களுக்கெதிராக சில மக்களுக்குக் கடவுள் ஆதரவளித்திருக்கவில்லையென்றால் மடங்கள், தேவாலயங்கள், யூத ஆலயங்கள் மற்றும் கடவுள்-ன் பெயர் அடிக்கடி நினைவு கூரப்படும்- மஸ்ஜிதுகள் ஆகியவை-அழிக்கப்பட்டுப் போயிருக்கும். நிச்சயமாக, கடவுள்-க்கு ஆதரவளிப்பவர்களுக்கு அவர் ஆதரவளிக் கின்றார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.
[22:42] அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு முன்னர் நோவா, ஆது, மற்றும் தமூது ஆகியோரின் சமூகத்தாரும் நம்ப மறுத்தனர்.