Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:40 — புனித யாத்திரை

الَّذينَ أُخرِجوا مِن دِيٰرِهِم بِغَيرِ حَقٍّ إِلّا أَن يَقولوا رَبُّنَا اللَّهُ ۗ وَلَولا دَفعُ اللَّهِ النّاسَ بَعضَهُم بِبَعضٍ لَهُدِّمَت صَوٰمِعُ وَبِيَعٌ وَصَلَوٰتٌ وَمَسٰجِدُ يُذكَرُ فيهَا اسمُ اللَّهِ كَثيرًا ۗ وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ ۗ إِنَّ اللَّهَ لَقَوِىٌّ عَزيزٌ

“எங்கள் இரட்சகர் கடவுள் தான்” என்று கூறியதைத் தவிர, மற்ற காரணமெதற்காகவு மின்றி, அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு நியாயமின்றி வெளியேற்றப்பட்டனர். மற்றவர்களுக்கெதிராக சில மக்களுக்குக் கடவுள் ஆதரவளித்திருக்கவில்லையென்றால் மடங்கள், தேவாலயங்கள், யூத ஆலயங்கள் மற்றும் கடவுள்-ன் பெயர் அடிக்கடி நினைவு கூரப்படும்- மஸ்ஜிதுகள் ஆகியவை-அழிக்கப்பட்டுப் போயிருக்கும். நிச்சயமாக, கடவுள்-க்கு ஆதரவளிப்பவர்களுக்கு அவர் ஆதரவளிக் கின்றார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.

[22:39] அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்ட காரணத்தால், அடக்குமுறை செய்யப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது, மேலும் கடவுள் நிச்சயமாக அவர் களுக்கு ஆதரவளிக்க ஆற்றலுடையவர்.

[22:41] அவர்கள் யாரென்றால், பூமியின் ஆட்சி யாளர்களாக நாம் அவர்களை நியமித்தால், அவர்கள் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிலைநாட்டுவார்கள், மேலும் நன்னெறியை ஆதரிப்பார்கள் மேலும் தீமையைத் தடுப்பார்கள். கடவுள் தான் முடிவான அரசர் ஆவார்.