குர்ஆன் 22:39 — புனித யாத்திரை
அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்ட காரணத்தால், அடக்குமுறை செய்யப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது, மேலும் கடவுள் நிச்சயமாக அவர் களுக்கு ஆதரவளிக்க ஆற்றலுடையவர்.
[22:38] நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் காக் கின்றார். நம்பிக்கைத் துரோகி, நன்றிகெட்டவர் எவரையும் கடவுள் நேசிப்பதில்லை.
[22:40] “எங்கள் இரட்சகர் கடவுள் தான்” என்று கூறியதைத் தவிர, மற்ற காரணமெதற்காகவு மின்றி, அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு நியாயமின்றி வெளியேற்றப்பட்டனர். மற்றவர்களுக்கெதிராக சில மக்களுக்குக் கடவுள் ஆதரவளித்திருக்கவில்லையென்றால் மடங்கள், தேவாலயங்கள், யூத ஆலயங்கள் மற்றும் கடவுள்-ன் பெயர் அடிக்கடி நினைவு கூரப்படும்- மஸ்ஜிதுகள் ஆகியவை-அழிக்கப்பட்டுப் போயிருக்கும். நிச்சயமாக, கடவுள்-க்கு ஆதரவளிப்பவர்களுக்கு அவர் ஆதரவளிக் கின்றார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.