Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:38 — புனித யாத்திரை

நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் காக் கின்றார். நம்பிக்கைத் துரோகி, நன்றிகெட்டவர் எவரையும் கடவுள் நேசிப்பதில்லை.

[22:37] அவற்றின் இறைச்சியோ அன்றி அவற்றின் இரத்தமோ கடவுள்-ஐ அடைவதில்லை. அவரை அடைவது உங்களுடைய நன்னெறி களே. உங்களுக்கு வழிகாட்டியதற்காக கடவுள்-ஐத் துதிப்பதன் மூலம் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும் பொருட்டு, அவர் அவற்றை உங்களுக்கு வசப்படுத்தினார். தர்மவான்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.

[22:39] அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்ட காரணத்தால், அடக்குமுறை செய்யப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது, மேலும் கடவுள் நிச்சயமாக அவர் களுக்கு ஆதரவளிக்க ஆற்றலுடையவர்.