Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:37 — புனித யாத்திரை

அவற்றின் இறைச்சியோ அன்றி அவற்றின் இரத்தமோ கடவுள்-ஐ அடைவதில்லை. அவரை அடைவது உங்களுடைய நன்னெறி களே. உங்களுக்கு வழிகாட்டியதற்காக கடவுள்-ஐத் துதிப்பதன் மூலம் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும் பொருட்டு, அவர் அவற்றை உங்களுக்கு வசப்படுத்தினார். தர்மவான்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.

[22:36] பிராணிப்பலியானது, உங்கள் சொந்த நலனிற்காகக் கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளில் உள்ளதாகும்.* அவை வரிசையில் நிற்கும்போது நீங்கள் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரை கூற வேண்டும். பலிக்காக அவை அர்ப்பணிக்கப்பட்டவுடன், நீங்கள் அதிலிருந்து உண்ணுவதுடன் ஏழைகளுக்கும் தேவையுடை யோருக்கும் உணவளிக்கவும் வேண்டும். நீங்கள் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும்பொருட்டு, இதற்காகத்தான்அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தினோம்,

[22:38] நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் காக் கின்றார். நம்பிக்கைத் துரோகி, நன்றிகெட்டவர் எவரையும் கடவுள் நேசிப்பதில்லை.