குர்ஆன் 22:36 — புனித யாத்திரை
பிராணிப்பலியானது, உங்கள் சொந்த நலனிற்காகக் கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளில் உள்ளதாகும்.* அவை வரிசையில் நிற்கும்போது நீங்கள் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரை கூற வேண்டும். பலிக்காக அவை அர்ப்பணிக்கப்பட்டவுடன், நீங்கள் அதிலிருந்து உண்ணுவதுடன் ஏழைகளுக்கும் தேவையுடை யோருக்கும் உணவளிக்கவும் வேண்டும். நீங்கள் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும்பொருட்டு, இதற்காகத்தான்அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தினோம்,
[22:35] கடவுள் என்று குறிப்பிடப்படும்போது நடுங் கிடும் இதயம் கொண்டவர்கள் அவர்கள் தான், துன்பமான காலத்திலும் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், அவர்கள் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம் முடைய வாழ்வாதாரங்களில் இருந்து, அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
[22:37] அவற்றின் இறைச்சியோ அன்றி அவற்றின் இரத்தமோ கடவுள்-ஐ அடைவதில்லை. அவரை அடைவது உங்களுடைய நன்னெறி களே. உங்களுக்கு வழிகாட்டியதற்காக கடவுள்-ஐத் துதிப்பதன் மூலம் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும் பொருட்டு, அவர் அவற்றை உங்களுக்கு வசப்படுத்தினார். தர்மவான்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.