குர்ஆன் 22:35 — புனித யாத்திரை
கடவுள் என்று குறிப்பிடப்படும்போது நடுங் கிடும் இதயம் கொண்டவர்கள் அவர்கள் தான், துன்பமான காலத்திலும் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், அவர்கள் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம் முடைய வாழ்வாதாரங்களில் இருந்து, அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
[22:34] கால்நடைகளை அவர்களுக்கு வழங்கிய தற்காகக் கடவுள்-ன் பெயரை அவர்கள் நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு சமூகத் திற்கும் நாம் சடங்குகளை விதித்துள்ளோம். உங்கள் தெய்வம் அதே ஒரே தெய்வம்தான்; நீங்கள் அனைவரும் அவரிடம் அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவோருக்கு நற்செய்தி வழங்குவீராக.
[22:36] பிராணிப்பலியானது, உங்கள் சொந்த நலனிற்காகக் கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளில் உள்ளதாகும்.* அவை வரிசையில் நிற்கும்போது நீங்கள் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரை கூற வேண்டும். பலிக்காக அவை அர்ப்பணிக்கப்பட்டவுடன், நீங்கள் அதிலிருந்து உண்ணுவதுடன் ஏழைகளுக்கும் தேவையுடை யோருக்கும் உணவளிக்கவும் வேண்டும். நீங்கள் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும்பொருட்டு, இதற்காகத்தான்அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தினோம்,