குர்ஆன் 22:34 — புனித யாத்திரை
கால்நடைகளை அவர்களுக்கு வழங்கிய தற்காகக் கடவுள்-ன் பெயரை அவர்கள் நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு சமூகத் திற்கும் நாம் சடங்குகளை விதித்துள்ளோம். உங்கள் தெய்வம் அதே ஒரே தெய்வம்தான்; நீங்கள் அனைவரும் அவரிடம் அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவோருக்கு நற்செய்தி வழங்குவீராக.
[22:33] பழமையான புனிதப்பள்ளிக்கு நன்கொடை யளிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு காலம் வரை ஏராளமான பயன்களை (கால்நடைகள்) உங்களுக்கு வழங்குகின்றன.
[22:35] கடவுள் என்று குறிப்பிடப்படும்போது நடுங் கிடும் இதயம் கொண்டவர்கள் அவர்கள் தான், துன்பமான காலத்திலும் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், அவர்கள் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம் முடைய வாழ்வாதாரங்களில் இருந்து, அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.