Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:91 — நம்பிக்கையாளர்கள்

கடவுள் ஒருபோதும் ஒரு மகனைப் பெற் றெடுக்கவில்லை அன்றி அவரைத் தவிர வேறு தெய்வம் எதுவும் எப்பொழுதும் இருந்ததில்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஒவ்வொரு தெய்வமும் தன் படைப்புகளோடு சுதந்திரத்தைப் பிரகடனம் செய்திருக்கும், மேலும் அவர்கள் ஒருவர் மற்றவருடன் அதிகாரத்திற்காகப் போட்டியிட்டிருப் பார்கள். கடவுள் துதிப்பிற்குரியவர்; அவர் களுடைய கூற்றுக்களுக்கெல்லாம் மிகவும் அப்பாற்பட்டவர்.

[23:90] நாம் அவர்களுக்குச் சத்தியத்தைக் கொடுத் துள்ளோம், அதே சமயம் அவர்களோ பொய்யர் களாக இருக்கின்றனர்.

[23:92] எல்லா இரகசியங்களையும் மற்றும் பிரகடனங் களையும் அறிந்தவர்; அவர் உயர்வானவர், ஒரு பங்குதாரரைக் கொண்டிருப்பதை விட்டும் மிகவும் மேலானவர்.