Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:1 — ஒளி

நாம் இறக்கி அனுப்பிய, மேலும் நாம் சட்டமாக விதித்துள்ள ஒரு சூரா. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, தெளிவான வெளிப்பாடுகளை அதனில் நாம் வெளிப் படுத்தியுள்ளோம்.

[24:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[24:2] விபச்சாரம் செய்பவள் மற்றும் விபச்சாரம் செய்பவன் ஆகிய அவர்கள் ஒவ்வொரு வருக்கும் நீங்கள் நூறு சவுக்கடிகள் கொடுக்க வேண்டும். கடவுள் மீதும் மற்றும் இறுதி நாளின் மீதும் நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், கடவுள்-ன் சட்டத்தைச் செயல் படுத்துவதை விட்டும் அனுதாபத்தால் நீங்கள் ஊசலாடாதீர்கள். மேலும் நம்பிக்கை யாளர்களின் ஒருகூட்டம் அவர்களுடைய தண்டனையைக் காணட்டும்.*