Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:2 — ஒளி

விபச்சாரம் செய்பவள் மற்றும் விபச்சாரம் செய்பவன் ஆகிய அவர்கள் ஒவ்வொரு வருக்கும் நீங்கள் நூறு சவுக்கடிகள் கொடுக்க வேண்டும். கடவுள் மீதும் மற்றும் இறுதி நாளின் மீதும் நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், கடவுள்-ன் சட்டத்தைச் செயல் படுத்துவதை விட்டும் அனுதாபத்தால் நீங்கள் ஊசலாடாதீர்கள். மேலும் நம்பிக்கை யாளர்களின் ஒருகூட்டம் அவர்களுடைய தண்டனையைக் காணட்டும்.*

[24:1] நாம் இறக்கி அனுப்பிய, மேலும் நாம் சட்டமாக விதித்துள்ள ஒரு சூரா. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, தெளிவான வெளிப்பாடுகளை அதனில் நாம் வெளிப் படுத்தியுள்ளோம்.

[24:3] விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் செய்யும் ஒருத்தியையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருத்தியையோ திருமணம் செய் வதில் சென்று முடிவான், மேலும் விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்யும் ஒருவனையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருவனையோ திருமணம் செய்வதில் சென்று முடிவாள். இது நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.