குர்ஆன் 24:46 — ஒளி
தெளிவுபடுத்தும் வெளிப்பாடுகளையே நாம் உமக்கு இறக்கி அனுப்பியுள்ளோம், பின்னர் விரும்புகின்ற எவரொருவரையும் நேரான தொரு பாதையில் கடவுள் வழிநடத்துகின்றார்.
[24:45] மேலும் கடவுள் தண்ணீரிலிருந்தே ஒவ்வொரு உயிர்ப்பிராணியையும் படைத்தார். அவற்றில் சில தங்கள் வயிறுகளால் நடக்கின்றன, சில இருகால்களால் நடக்கின்றன, மேலும் சில நான்கால் நடக்கின்றன. தான் நாடுகின்ற எதையும் கடவுள் படைக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[24:47] அவர்கள், “ நாங்கள் கடவுள் மீதும் தூதர் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் கீழ்ப்படிகின்றோம்” என்று கூறுகின்றார்கள், ஆனால் பின்னர் அவர்களில் சிலர் அதற்குப் பிறகு, பின்னால் சறுக்கி விடுகின்றார்கள். இவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல.