குர்ஆன் 24:61 — ஒளி
குருடர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், முடவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், அன்றி ஊனமுற்றவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், உங்களுடைய வீடுகளில் உண்பதால் நீங்கள் குற்றம் பிடிக்கப்படமாட்டீர்கள் என்பதைப் போல, அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய வீடுகளில், அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் சகோதரிகளின் வீடுகளில், அல்லது உங்கள் தந்தையர்களுடைய சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் தந்தையர்களுடைய சகோதரிகளின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய சகோதரிகளின் வீடுகளில், அல்லது அவற்றின் சாவிகளை நீங்கள் வைத்திருக்கின்ற உங்களுக்குச் சொந்தமான வீடுகளில், அல்லது உங்கள் நண்பர்களுடைய வீடுகளில். ஒன்றுசேர்ந்தோ அல்லது தனித் தனியாகவோ உண்பதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்துவிடவில்லை. எந்த வீட்டில் நீங்கள் நுழையும் போதும் கடவுள் - இடமிருந்துள்ள அருள்பாலிக்கப்பட்ட மேலும் நல்ல, ஒரு வாழ்த்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்திக்கொள்ள வேண்டும். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, கடவுள் இவ்விதமாக இந்த வெளிப் பாடுகளை உங்களுக்கு விவரிக்கின்றார்.
[24:60] திருமணம் செய்து கொள்ளப்படுவதை எதிர் பார்க்காதிருக்கும் வயது முதிர்ந்த பெண்கள், தங்களுடைய உடல்களை மிகவும் அதிகமாக வெளிப்படுத்தாதவாறு, தங்களுடைய ஆடைக்கட்டுப்பாட்டைத் தளர்த்திக் கொள் வதன் மூலம் தவறெதுவும் செய்து விடவில்லை. கண்ணியத்தைப் பராமரித்துக் கொள்வதே அவர்களுக்குச் சிறந்ததாகும். கடவுள் செவி யேற்பவர், அறிந்தவர்.
[24:62] கடவுள் மீதும் அவருடைய தூதர்* மீதும் நம்பிக்கை கொண்டவர்களே உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர், மேலும் அவர்கள் அவருடன் ஒரு சமூகக் கூட்டத்தில் இருக்கும் போது, அனுமதியின்றி அவரை விட்டுச் சென்றுவிட மாட்டார்கள். அனுமதி கேட்பவர் களே கடவுள் மீதும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். தங்களுடைய விவகாரங்களில் சிலவற்றைக் கவனிப்பதற் காக, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், நீர் விரும்பியவருக்கு நீர் அனுமதி வழங்கலாம், மேலும் அவர்களை மன்னிக்கும்படிக் கடவுள்-இடம் கேட்பீராக. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.