Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:19 — சட்டப்புத்தகம்

நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த தூதுச் செய்தியை அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் உள்ளாகி யிருக்கும் தண்டனையிலிருந்து உங்களால் அவர்களைக் காக்க இயலாது, அன்றியும் எந்த வழியிலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யவும் முடியாது. உங்களில் எவர் ஒருவர் தீமை செய்கின்றாரோ, அவரை நாம் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவோம்.

[25:18] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர், உம்முடன் எந்த இரட்சகர்களையும் நாங்கள் அமைத்துக் கொள்வதென்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. ஆனால் அவர்களை, அவர்களுடைய பெற்றோர் களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க நீர் அனுமதித்தீர். அதன் விளைவாக, அவர்கள் தூதுச்செய்தியைப் புறக்கணித்தனர், மேலும் இவ்விதமாகத் தீய மக்களானார்கள்” என்று கூறுவார்கள்.

[25:20] உணவு உட்கொள்ளாத, மேலும் அங்காடிகளில் நடந்து போகாத எந்தத் தூதர்களையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. இவ்விதமாக நாம் உங்களை ஒருவரைக் கொண்டு மற்றவரை சோதனை செய்கின்றோம்; நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடனேஇருப்பீர்களா? உம்முடைய இரட்சகர் பார்ப்பவர்.