குர்ஆன் 25:20 — சட்டப்புத்தகம்
உணவு உட்கொள்ளாத, மேலும் அங்காடிகளில் நடந்து போகாத எந்தத் தூதர்களையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. இவ்விதமாக நாம் உங்களை ஒருவரைக் கொண்டு மற்றவரை சோதனை செய்கின்றோம்; நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடனேஇருப்பீர்களா? உம்முடைய இரட்சகர் பார்ப்பவர்.
[25:19] நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த தூதுச் செய்தியை அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் உள்ளாகி யிருக்கும் தண்டனையிலிருந்து உங்களால் அவர்களைக் காக்க இயலாது, அன்றியும் எந்த வழியிலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யவும் முடியாது. உங்களில் எவர் ஒருவர் தீமை செய்கின்றாரோ, அவரை நாம் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவோம்.
[25:21] நம்மைச் சந்திப்பதை எதிர்பார்க்காதிருப்பவர்கள், “வானவர்கள் மட்டும் நம்மிடம் இறங்கி வர முடிந்தால், அல்லது நாம் நம்முடைய இரட்சகரைப் பார்க்க முடிந்தால் (அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)!” என்று கூறினார்கள். உண்மையில், அவர்கள் மிகப்பெரும் ஆணவத்தைக் கொண்டு விட்டனர், மேலும் மிகப்பெரும் இறைநிந்தனையைச் செய்து விட்டனர்.