Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:21 — சட்டப்புத்தகம்

நம்மைச் சந்திப்பதை எதிர்பார்க்காதிருப்பவர்கள், “வானவர்கள் மட்டும் நம்மிடம் இறங்கி வர முடிந்தால், அல்லது நாம் நம்முடைய இரட்சகரைப் பார்க்க முடிந்தால் (அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)!” என்று கூறினார்கள். உண்மையில், அவர்கள் மிகப்பெரும் ஆணவத்தைக் கொண்டு விட்டனர், மேலும் மிகப்பெரும் இறைநிந்தனையைச் செய்து விட்டனர்.

[25:20] உணவு உட்கொள்ளாத, மேலும் அங்காடிகளில் நடந்து போகாத எந்தத் தூதர்களையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. இவ்விதமாக நாம் உங்களை ஒருவரைக் கொண்டு மற்றவரை சோதனை செய்கின்றோம்; நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடனேஇருப்பீர்களா? உம்முடைய இரட்சகர் பார்ப்பவர்.

[25:22] வானவர்களை அவர்கள் காணும் அந்நாளில், குற்றவாளிகளுக்கு அது நற்செய்தியாக இருக்காது; அவர்கள், “இப்பொழுது, நாம் திரும்பிச் செல்லமுடியாதவாறு அடைக்கப்பட்டு விட்டோம்” என்று கூறுவார்கள்.