குர்ஆன் 25:3 — சட்டப்புத்தகம்
இருப்பினும், எந்த ஒன்றையும் படைக்காத வற்றை - அவர்களே படைக்கப்பட்டவர்களாக உள்ளனர்-மேலும் தங்களுக்கே கூட தீமையோ அல்லது நன்மையோ செய்து கொள்ளச் சக்தியற்றவற்றை, அவருடன் தெய்வங்களாக அவர்கள் அமைத்துக் கொள்கின்றனர், அன்றி யும் அவர்கள், வாழ்வையோ அல்லது மரணத் தையோ அல்லது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு தலையோ கட்டுப்படுத்தும் எந்தச் சக்தியையும் பெற்றிருக்கவில்லை.
[25:2] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் உரிய ஒருவர். ஒருபோதும் அவர் ஒரு மகனைக் கொண்டிருக்கவில்லை, அன்றியும் ஆட்சியதிகாரத்தில் எந்தப் பங்குதாரர்களும் அவருக்கு இல்லை. அவர் ஒவ்வொன்றையும் மிகச் சரியான அளவில் படைத்தார்; ஒவ்வொன்றையும் அவர் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டார்.*
[25:4] நம்ப மறுப்பவர்கள், “இது மற்ற சில மனிதர்களின் உதவியுடன், அவர் உருவாக்கி கொண்ட ஓர் இட்டுக் கட்டலேயாகும்” என்று கூறினார்கள். அவர்கள் ஓர் இறை நிந்தனையையும் மேலும் ஒரு பொய்மையையும் கூறி விட்டனர்.