Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:2 — சட்டப்புத்தகம்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் உரிய ஒருவர். ஒருபோதும் அவர் ஒரு மகனைக் கொண்டிருக்கவில்லை, அன்றியும் ஆட்சியதிகாரத்தில் எந்தப் பங்குதாரர்களும் அவருக்கு இல்லை. அவர் ஒவ்வொன்றையும் மிகச் சரியான அளவில் படைத்தார்; ஒவ்வொன்றையும் அவர் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டார்.*

[25:1] தன் அடியாருக்கு, அவர் முழு உலகிற்கும் ஓர் எச்சரிக்கை செய்பவராகப் பணியாற்றுவதற் காக, இந்தச் சட்டப்புத்தகத்தை வெளிப் படுத்திய அந்த ஒருவர், பாக்கியம் மிக்கவர்.

[25:3] இருப்பினும், எந்த ஒன்றையும் படைக்காத வற்றை - அவர்களே படைக்கப்பட்டவர்களாக உள்ளனர்-மேலும் தங்களுக்கே கூட தீமையோ அல்லது நன்மையோ செய்து கொள்ளச் சக்தியற்றவற்றை, அவருடன் தெய்வங்களாக அவர்கள் அமைத்துக் கொள்கின்றனர், அன்றி யும் அவர்கள், வாழ்வையோ அல்லது மரணத் தையோ அல்லது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு தலையோ கட்டுப்படுத்தும் எந்தச் சக்தியையும் பெற்றிருக்கவில்லை.